பார்வைச் சொற்கள் (sight words) என்பவை பார்த்தவுடன் வாசிக்கக் கூடிய சொற்கள். பேச்சிலும், புத்தகங்களிலும் அதிக அளிவில் இடம்பெறும் 100 பார்வைச் சொற்கள் சிறந்த முறையில் தேர்ந்தெடுத்து கொடுக்கப்பட்டுள்ளன. வண்ணமயமான வானவில் வடிவில் சொற்கள் இருப்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
வண்ணங்களின் அடிப்படையிலும், இடது/வலது மேகம் என்ற அடிப்படையிலும் சிறுவர்கள் சொற்களை வரிசையாக வாசித்துப் பழகலாம். சான்றாக, “சிவப்பு வண்ணத்திற்குள் இருக்கும் சொற்களை வாசிங்க”, “வலது மேகத்தில் உள்ள சொற்களை வாசிங்க..” என்று கூறி வாசிக்கச் செய்யலாம். சரளமாகவும் விரைவாகவும் படிப்பதற்கு இந்தப் பயிற்சி அருமையாக உதவும். பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.