பயிற்சித்தாள்

ப | சொற்குடும்பம்

சொற்குடும்பம் பகுதியில் “ப” என்ற ஒலியில் தொடங்கக்கூடிய சொற்கள், பொருத்தமான படங்களுடன் இங்கு வழங்கப்பட்டுள்ளன. சொற்குடும்பத்தில் “ப” சொற்களைத் திருத்தமாகக் கூறிப் பழகுக. இது போன்ற சொற்குடும்பம் சார்ந்த பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் அழகிய இசையுடன் கூடிய எண்ணற்ற தமிழ்ச் சொற்களை குழந்தைகள் குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ள முடியும். சில வாரங்களுக்குள் அவர்களின் சொல்வளம் பன்மடங்கு பெருகியிருப்பதை நீங்கள் விரைவிலேயே உணர்ந்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் பதிவிறக்கு என்ற […]

ப | சொற்குடும்பம் Read More »

முட்டை – 1 | வெட்டு ஒட்டு

முட்டை வேட்டை (Egg Hunt) என்றாலே சிறுவர்களும் அவர்களின் சுறுசுறுப்பான தேடல்களும் தான் நம் நினைவிற்கு வரும். அந்த வகையில் முட்டைகளுக்கு வண்ணமிட்டு அவற்றை தனித்தனியே வெட்டி சரியான இடத்தைத் தேர்வுசெய்து ஒட்டும் பயிற்சித்தொகுப்பு உங்களுக்காக இங்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தொகுப்பில் இரண்டு தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முட்டை வேட்டைக்கு உங்கள் குழந்தைகள் தயாரா? ??? தாள் 1 – வெட்டுதல்: முட்டைகள் ஒவ்வொன்றிற்கும் பல்வேறு வண்ணங்களில் வண்ணமிடுங்கள். பயிற்சித்தாளில்  இருக்கும் 9 முட்டைகளுக்கும் வண்ணமிட்ட பிறகு தனித்தனியே

முட்டை – 1 | வெட்டு ஒட்டு Read More »

பள்ளிப் பொருள்கள் | சொல்வளம் | வண்ணமிடுதல்

சொல்வளம் பெருகினால் மொழியின் மீது உள்ள நேசம் பெருகும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நிறைய சமயங்களில் குழந்தைகள் ஒரு பொருளுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கூற முயல்வார்கள். ஆனால் போதுமான பயிற்சி இன்மையால், அவர்கள் ஆங்கிலச் சொல்லைச் சிறிது சிறிதாகப் பயன்படுத்தத் துவங்குவார்கள். சிறுவர்களின் இவ்வாறான தமிழ்ச் சொல்லுக்கான தேடல் அவர்களின் பால பருவத்திலிருத்தே மூளைக்குள் நிகழ்ந்திருக்கும். பல்வேறு காரணங்களால் பல முறை அந்தத் தேடல் தோல்வியில் முடிவதால், விரைவாகப் பேசுவதற்காக அவர்கள் அதிக

பள்ளிப் பொருள்கள் | சொல்வளம் | வண்ணமிடுதல் Read More »

காய்கறிகள் | சொற்பொருத்தம்

காய்கறிகள் ஒவ்வொன்றும் அவற்றின் பெயர்கள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.  பெயர்கள் முழுமை அடையும்படி சரியாக இணைக்கும் பயிற்சி இது. இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் குழந்தைகள் காய்கறிகளின் பெயர்களை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.

காய்கறிகள் | சொற்பொருத்தம் Read More »

த வரிசை | அறிந்து நிரப்புதல்

த வரிசை எழுத்துகளை வரிசையாக நிரப்பும் பயிற்சி. ஒவ்வொரு தகர வரிசை எழுத்திற்கும் அதன் ஒலியைக் கொண்ட படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்து அதன் பெயரைக் கூறிக்கொண்டே சரியான எழுத்தை எழுத வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் குழந்தைகள் ஒவ்வொரு உயிர் ஒலிக்கும் ஏற்ற த வரிசை உயிர்மெய்யை நன்றாக அடையாளம் காண்பார்கள். வண்ண வண்ண படங்கள் கொண்ட இந்தப் பயிற்சித்தாள் சிறுவர்களுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க உதவும். 247 தமிழ்

த வரிசை | அறிந்து நிரப்புதல் Read More »

error:
Scroll to Top