திருக்குறள் 31 – சிறப்புஈனும் செல்வமும் | அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

 

 

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 4: அறன் வலியுறுத்தல்

குறள் 31

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

விளக்கம்

அறம் சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிருள்ள மனிதருக்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு எதுவாக இருக்க முடியும்?

சொற்பொருள்

சிறப்புஈனும் – சிறப்பு அளிக்கும்
செல்வமும் ஈனும் – செல்வமும் அளிக்கும்
அறத்தினூஉங்கு –  அத்தகைய அறத்தை விட
ஆக்கம் – நன்மையானது
எவனோ – வேறு எதுவாக இருக்க முடியும்
உயிர்க்கு – உயிருள்ள மனிதருக்கு?

Section: Virtue
Category: Introduction
Chapter 4: Assertion of the Strength of the Virtue

Couplet 31

It yields distinction, yields prosperity; what gain
Greater than virtue can a living man obtain

Explanation

Virtue brings significance and wealth; what other greater source of happiness can man possess?

Transliteration

Sirappu-eenum Selvamum Eenum ARathinoo-ungu
Aakkam Evano Uyirkku

Glossary

சிறப்புஈனும் – (virtue) brings significance
செல்வமும் ஈனும் – (virtue) brings wealth
அறத்தினூஉங்கு – than virtue
ஆக்கம் – greater gain
எவனோ – what other
உயிர்க்கு – can a human possess?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top