பால்: | அறத்துப்பால் |
இயல்: | பாயிரவியல் |
அதிகாரம் 3: | நீத்தார் பெருமை |
குறள் 30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
விளக்கம்
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
சொற்பொருள்
அந்தணர் – அந்தத்தை உணர்ந்தவர்
என்போர் – எனப்படுபவர்
அறவோர் – அறம் செய்பவர்
மற்றெவ்வுயிர்க்கும் – மற்ற எந்த உயிர்க்கும்
தண்மை – குளிர்ச்சி; சாந்தம்
செந்தண்மை – செம்மையான சாந்தம்
பூண்டு – மேற்கொண்டு
ஒழுகலான் – தொடந்து செய்து வருவதால் (வேற்றுமை உருபு ‘ஆல்’ என்பது சங்க காலத்தில் ‘ஆன்’ என்று பயன்படுத்தப்பட்டது; மேலும் விளக்கம் இங்கே..)
Section: | Virtue |
Category: | Introduction |
Chapter 3: | The Greatness of Ascetics |
Couplet 30
Towards all that breathe, with seemly graciousness adorned they live;
And thus to virtue’s sons the name of ‘Anthanar’ men give
Explanation
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.
Transliteration
Anthanar Enbor Aravormat Revvuyirkum
Senthanmai Poondozhuga Laan
Glossary
அந்தணர் – “Anthanar”, a sacred title
என்போர் – those who are called as
அறவோர் – virtuous people
மற்றெவ்வுயிர்க்கும் – towards all creatures
தண்மை – cold; calm
செந்தண்மை – with the act of peacefulness
பூண்டு – proceed along
ஒழுகலான் – because they consistently