குறில்-நெடில்
உயிரெழுத்தின் ஒலிகள் குறில், நெடில் என்று இரண்டு வகைப்படும். அ இ உ எ ஒ என்ற ஐந்து உயிரெழுத்துகளும் குறுகிய (குறைந்த) ஓசை கொண்டவை. எனவே அவை ஐந்தும் குறில் எழுத்துகள் ஆகும். ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்ற ஏழு உயிரெழுத்துகளும் நெடிய (நீண்ட) ஓசை கொண்டவை. எனவே அவை ஐந்தும் குறில் எழுத்துகள் ஆகும்.
குறில்
அ இ உ எ ஒ
நெடில்
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ
இனம்
மெய்யெழுத்தின் ஒலிகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும். க் ச் ட் த் ப் ற் என்ற ஆறு மெய்யெழுத்துகளும் வலிய (வலிமையான) ஓசை கொண்டவை. எனவே அவை ஆறும் வல்லினம் எனப்படும். ங் ஞ் ண் ந் ம் ன் என்ற ஆறு மெய்யெழுத்துகளும் மெல்லிய (மென்மையான) ஓசை கொண்டவை. எனவே அவை ஆறும் மெல்லினம் எனப்படும். ய் ர் ல் வ் ழ் ள் என்ற ஆறு மெய்யெழுத்துகளும் வலிமைக்கும் மென்மைக்கும் இடைப்பட்ட ஓசை கொண்டவை. எனவே அவை ஆறும் இடையினம் எனப்படும்.
வல்லலினம்
க் ச் ட் த் ப் ற்
மெல்லினம்
ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம்
ய் ர் ல் வ் ழ் ள்
எழுத்துகளை முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை செல்லவும்.
உயிர்மெய் எழுத்துகளைப் பார்த்து குறில்-நெடில் மற்றும் வல்லினம்-மெல்லினம்-இடையினம் என அறிந்துகொள்ளும் பயிற்சித்தாள். கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகளுக்கு ஏற்றவாறு சரியான வண்ணத்தைக் கொண்டு ஊதற்பந்துகளுக்கு வண்ணமிடுக.
பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.