எழுதுதல்

க-ன | “அ” வரிசை | அறிந்து நிரப்புதல்

க-ன வரையிலான “அ” வரிசை உயிர்மெய் எழுத்துகளைச் சரியாக நிரப்பும் பயிற்சி. வண்ண வண்ண படங்களும் அவற்றிற்கு ஏற்ற சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சொல்லிலும் க முதல் ன வரையிலான ஏதோ ஒரு “அ” வரிசை உயிர்மெய் எழுத்து விடுபட்டுள்ளது. படத்தைப் பார்த்து அதன் பெயரைக் கூறிக்கொண்டே சரியான உயிர்மெய் எழுத்தை எழுத வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் குழந்தைகள் “அ” வரிசை உயிர்மெய் எழுத்துகளை நன்றாக அடையாளம் காண்பார்கள். சொற்களுக்கு ஏற்ற படங்கள் […]

க-ன | “அ” வரிசை | அறிந்து நிரப்புதல் Read More »

ற் – றௌ | புள்ளிகளை இணைத்தல்

புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி மெய்யெழுத்தான ‘ற்’ மற்றும் ‘ற’ முதல் ‘றௌ’ வரையிலான றகர வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். ற் மற்றும் றகர வரிசை   ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ       

ற் – றௌ | புள்ளிகளை இணைத்தல் Read More »

ம வரிசை | அறிந்து நிரப்புதல்

ம வரிசை எழுத்துகளை வரிசையாக நிரப்பும் பயிற்சி. ஒவ்வொரு மகர வரிசை எழுத்திற்கும் அதன் ஒலியைக் கொண்ட படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்து அதன் பெயரைக் கூறிக்கொண்டே சரியான எழுத்தை எழுத வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் குழந்தைகள் ஒவ்வொரு உயிர் ஒலிக்கும் ஏற்ற ம வரிசை உயிர்மெய்யை நன்றாக அடையாளம் காண்பார்கள். வண்ண வண்ண படங்கள் கொண்ட இந்தப் பயிற்சித்தாள் சிறுவர்களுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க உதவும். 247 தமிழ்

ம வரிசை | அறிந்து நிரப்புதல் Read More »

ப வரிசை | அறிந்து நிரப்புதல்

ப வரிசை எழுத்துகளை வரிசையாக நிரப்பும் பயிற்சி. ஒவ்வொரு பகர வரிசை எழுத்திற்கும் அதன் ஒலியைக் கொண்ட படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்து அதன் பெயரைக் கூறிக்கொண்டே சரியான எழுத்தை எழுத வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் குழந்தைகள் ஒவ்வொரு உயிர் ஒலிக்கும் ஏற்ற ப வரிசை உயிர்மெய்யை நன்றாக அடையாளம் காண்பார்கள். வண்ண வண்ண படங்கள் கொண்ட இந்தப் பயிற்சித்தாள் சிறுவர்களுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க உதவும். 247 தமிழ்

ப வரிசை | அறிந்து நிரப்புதல் Read More »

உயிரெழுத்துகள் – 2 | நிரப்புதல்

உயிரெழுத்துகள் ஒவ்வொன்றையும் வரிசையாக வாசித்து விடுபட்ட இடங்களை நிரப்பும் பயிற்சி. தொடர்வண்டியில் இருக்கும் பெட்டிகளில் உயிரெழுத்துகள்  கொடுக்கப்பட்டுள்ளன. சில பெட்டிகள் எந்த எழுத்தும் இல்லாமல் விடுபட்டு உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தையும் உச்சரித்து காலியான பெட்டிகளில் சரியான உயிரெழுத்தைக் கூறிக்கொண்டே எழுத வேண்டும்.  இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் குழந்தைகள் 12 உயிரெழுத்துகளையும்  நன்றாக அடையாளம் காண்பார்கள். அவற்றை வரிசைப்படி நினைவிலும் வைத்துக்கொள்வார்கள். வண்ணமிட ஏற்றதாக இருப்பதால் இந்தப் பயிற்சித்தாள் சிறுவர்களுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க

உயிரெழுத்துகள் – 2 | நிரப்புதல் Read More »

error:
Scroll to Top