வண்ணமிடுதல்

ள் – ளௌ | புள்ளிகளை இணைத்தல்

புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி மெய்யெழுத்தான ‘ள்’ மற்றும் ‘ள’ முதல் ‘ளௌ’ வரையிலான ளகர வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். ள் மற்றும் ளகர வரிசை   ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ      

ள் – ளௌ | புள்ளிகளை இணைத்தல் Read More »

உயிர்மெய் – 1 | க-ன | தொடக்க ஒலி எது?

ஒவ்வொரு படத்திற்கும் வண்ணமிட்டு அதன் தொடக்க ஒலி எது என்று  சரியாகக் கண்டறிந்து வட்டமிடும் பயிற்சித்தாள். உயிர்மெய் எழுத்துகளில் “க” முதல் “ன” வரையிலான 18 ஒலிகளில் இருந்து படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வட்டமிடும் பொழுது ஒவ்வொரு படத்தின் பெயரையும் தமிழில் கூறிக்கொண்டே வண்ணமிட வேண்டும். பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிர்மெய் – 1 | க-ன | தொடக்க ஒலி எது? Read More »

பொம்மை | திட்டப்பணி

எளிமையான முறையில் காகிதத்தில் பொம்மை செய்வொம் வாருங்கள். தேவையான பொருள்கள் ? பயிற்சித்தாள் ?? வண்ணங்கள் ?✂ கத்தரிக்கோல் ✂ செயல்முறை பொம்மைகளுக்கு விருப்பம்போல் வண்ணமிடுங்கள். நான்கு பொம்மைகளை உள்ளடக்கிய சொவ்வகத்தை தனியாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக விசிறி செய்வதற்கு மடிப்பது போல் காகிதத்தை முன்னும் பின்னுமாக மடியுங்கள். மடித்த நிலையிலேயே கத்தரிக்கோல் வைத்து பொம்மை உருவத்தை வெட்டுங்கள். சிறிய குழந்தைகளாக இருந்தால், மடிப்பு கலையாமல் வெட்டுவதற்கு பெரியவர்களின் உதவி அவசியம். இந்தப் பயிற்சியின் வாயிலாக குழந்தைகளுக்கு

பொம்மை | திட்டப்பணி Read More »

வண்ணங்கள் | அறிந்து வண்ணமிடுதல்

வண்ணங்கள் ஒவ்வொன்றையும் குறிக்கும் சொற்களும் மெழுகுகோல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சொல்லும் எந்த வண்ணத்தைக் குறிக்கிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு வண்ணமிடும் பயிற்சித்தாள் இது. இந்தப் பயிற்சியின் மூலம் சிறுவர்கள் வண்ணங்களின் பெயர்களை வாசித்து அறிந்துகொள்வார்கள். பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

வண்ணங்கள் | அறிந்து வண்ணமிடுதல் Read More »

மஞ்சள் | வாசித்தல்

மஞ்சள் வண்ணத்தை நன்றாகக் கற்பதற்கான பயிற்சி. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைச் சிறந்த முறையில் வாசித்துப் பழகுக. படத்திற்குச் சரியான வண்ணத்தைக் கொண்டு வண்ணமிடுக. மஞ்சள் என்ற சொல்லைத் திருத்தமாக எழுதுக. இது போன்ற வாசித்தல் பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளால் சரளமாக வாசிக்க முடியும். நாளுக்கு நாள் அவர்களது வாசிப்பின் வேகம் கூடிக்கொண்டே செல்வதை நீங்கள் கண்கூடாகப் பார்த்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

மஞ்சள் | வாசித்தல் Read More »

error:
Scroll to Top