
எளிமையான முறையில் காகிதத்தில் பொம்மை செய்வொம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
? பயிற்சித்தாள் ?
? வண்ணங்கள் ?
✂ கத்தரிக்கோல் ✂

செயல்முறை
- பொம்மைகளுக்கு விருப்பம்போல் வண்ணமிடுங்கள். நான்கு பொம்மைகளை உள்ளடக்கிய சொவ்வகத்தை தனியாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
- அடுத்ததாக விசிறி செய்வதற்கு மடிப்பது போல் காகிதத்தை முன்னும் பின்னுமாக மடியுங்கள்.
- மடித்த நிலையிலேயே கத்தரிக்கோல் வைத்து பொம்மை உருவத்தை வெட்டுங்கள். சிறிய குழந்தைகளாக இருந்தால், மடிப்பு கலையாமல் வெட்டுவதற்கு பெரியவர்களின் உதவி அவசியம்.
இந்தப் பயிற்சியின் வாயிலாக குழந்தைகளுக்கு படங்களில் உள்ள வடிவ வேறுபாடுகள் மற்றும் மனிதரின் ஒற்றுமை ஆகியவற்றை கற்றுக்கொடுக்கலாம்.

பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.