சொல்வளம் பெருகினால் மொழியின் மீது உள்ள நேசம் பெருகும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நிறைய சமயங்களில் குழந்தைகள் ஒரு பொருளுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கூற முயல்வார்கள். ஆனால் போதுமான பயிற்சி இன்மையால், அவர்கள் ஆங்கிலச் சொல்லைச் சிறிது சிறிதாகப் பயன்படுத்தத் துவங்குவார்கள்.
சிறுவர்களின் இவ்வாறான தமிழ்ச் சொல்லுக்கான தேடல் அவர்களின் பால பருவத்திலிருத்தே மூளைக்குள் நிகழ்ந்திருக்கும். பல்வேறு காரணங்களால் பல முறை அந்தத் தேடல் தோல்வியில் முடிவதால், விரைவாகப் பேசுவதற்காக அவர்கள் அதிக அளவு ஆங்கிலம் கலந்து பேசத் தொடங்குவார்கள்.
ஆரம்ப காலகட்டங்களில் பெற்றோருக்கும் இது இயல்பான ஒன்றாகத் தோன்றிவிட்டால், அந்தச் சிறுவர்கள் பின்னாளில் தமிழ் கற்பது கடினமான ஒன்றாக மாறிவிடும். இது போன்ற சூழலில் இருந்து பிள்ளைகளைக் கவனமாக வழிநடத்த கூடுதல் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன.
அ சொற்கள்:
கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு படத்திற்கும் வண்ணமிட்டு அதன் தமிழ்ச் சொல்லைக் கூறிப் பழகும் பயிற்சித்தாள் இது.
இப்பயிற்சியைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் எண்ணற்ற தமிழ்ச் சொற்களைக் குறுகிய காலத்தில் குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும். சில வாரங்களுக்குள் அவர்களின் சொல்வளம் பன்மடங்கு பெருகுவதை நீங்கள் விரைவிலேயே உணர்ந்து மகிழ்வீர்கள்.
இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.