உயிரெழுத்துகள் 12-ஐயும் வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தொகுப்பு. பட்டுப்புழுவின் பாகங்களுக்கு வண்ணமிட்டு அவற்றை தனித்தனியே வெட்டி சரியான இடத்தில் வரிசையாக ஒட்டும் பயிற்சி. இந்தப் பயிற்சித்தொகுப்பில் இரண்டு தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தாள் 1 – வெட்டுதல்:
பட்டுப்புழுவின் பாகங்கள் ஒவ்வொன்றிற்கும் பல்வேறு வண்ணங்களில் வண்ணமிடுங்கள். பயிற்சித்தாளில் இருக்கும் பட்டுப்புழுவின் 12 பாகங்களுக்கும் வண்ணமிட்ட பிறகு தனித்தனியே வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
தாள் 2 – ஒட்டுதல்:
ஒட்டுவதற்கான தாளில் (தாள் 2) வெட்டிய பாகங்களை ஒவ்வொன்றாக எடுத்து உயிரெழுத்தை உச்சரித்து சரியான வரிசையில் ஒட்டுக. இதே போன்று அனைத்து பாகங்களையும் ஒட்டி பட்டுப்புழுவை நிறைவு செய்க.
இந்த வகை பயிற்சி குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிறுவர்கள் உறசாகத்துடன் தமிழ் உயிரெழுத்துகளைக் கற்றுக்கொள்வார்கள். அவர்களின் நுண்தசை இயக்குதிறனும் (fine motor skill) பன்மடங்கு உயரும்.
தேவையான பொருள்கள்
? பயிற்சித்தாள் ?
? வண்ணங்கள் ?
✂ கத்தரிக்கோல் ✂
⌸ பசை ⌸
இந்தப் பயிற்சி குழந்தைகளுக்கு தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளையும் அறிமுகப்படுத்துவதற்கு ஏற்றது. பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.