எழுத்துக் கணக்கு என்னும் இப்பகுதியில் உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் மற்றும் உயிர்மெய் எழுத்துகளைச் சரியாக நிரப்பும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே விடுபட்டுள்ள எழுத்துகளை ஒலியின் அடிப்படையில் கணக்கிட்டு எழுத வேண்டும்.
சான்றுகள்:
ட் ➕ ஏ = டே
டே ➖ ட் = ஏ
டே ➖ ஏ = ட்
இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் குழந்தைகள் தமிழ் எழுத்துகளையும் அவற்றின் ஒலி வேறுபாடுகளையும் நன்றாக அடையாளம் காண்பார்கள். இந்தப் பயிற்சித்தாள் சிறுவர்களுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க உதவும்.
247 தமிழ் எழுத்துகளையும் முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை செல்லவும்.
பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.