பால்: | அறத்துப்பால் |
இயல்: | இல்லறவியல் |
அதிகாரம் 8: | அன்புடைமை |
குறள் 72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
விளக்கம்
அன்பு இல்லாதவர் அனைத்து பொருள்களையும் தமக்கே உரிமையாக்கி வாழ்வர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் பிறருக்கு உரிமையாக்கி வாழ்வர்.
சொற்பொருள்
அன்பிலார் – அன்பு இல்லாதவர்
எல்லாம் – அனைத்தையும்
தமக்குரியர் – தனக்கு மட்டும் வைத்துக்கொள்வர்
அன்புடையார் – அன்பு உடையவர்
என்பும் – எலும்பையும்
உரியர் – உடைமை ஆக்குவர்
பிறர்க்கு – பிற உயிர்களுக்கு
Section: | Virtue |
Category: | Domestic Virtue |
Chapter 8: | Possession of Love |
Couplet 72
The loveless to themselves belong alone;
The loving men are others’ to the very bone
Explanation
Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.
Transliteration
Anbilaar Ellam Thamakkuriyar Anbudaiyaar
Enbum Uriyar Pirarku
Glossary
அன்பிலார் – loveless
எல்லாம் – everything
தமக்குரியர் – keep only for themselves
அன்புடையார் – those who possess love
என்பும் – even their bones
உரியர் – make it belong
பிறர்க்கு – to others