திருக்குறள் 73 – அன்போடு இயைந்த | அதிகாரம் 8 – அன்புடைமை

திருக்குறள் 73 | அறத்துப்பால் | இல்லறவியல் | அன்புடைமை
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம் 8: அன்புடைமை

குறள் 73

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு

விளக்கம்

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

சொற்பொருள்

அன்போடு – அன்புடன்
இயைந்த – பொருந்திய
வழக்கென்ப – வாழ்க்கை என்பது
ஆருயிர்க்கு – அருமையான உயிருக்கு
என்போடு – எலும்புடன்
இயைந்த – பொருந்திய
தொடர்பு – பயன்

Thirukkural 72 | Arathuppaal | Illaraviyal | Anbudaimai

Section: Virtue
Category: Domestic Virtue
Chapter 8: Possession of Love

Couplet 73

Of precious soul with body’s flesh and bone,
The union yields one fruit, the life of love alone

Explanation

They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).

Transliteration

Anboedu Iyaindha Vazhakkenba Aaruyirku
Enboedu Iyaindha Thodarbu

Glossary

அன்போடு – with love
இயைந்த – union
வழக்கென்ப – life (with love)
ஆருயிர்க்கு – of precious soul
என்போடு – with body (and bone)
இயைந்த – union
தொடர்பு – outcome

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top