திருக்குறள் 12 – துப்பார்க்குத் துப்பாய | அதிகாரம் 2 – வான்சிறப்பு



பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 2: வான்சிறப்பு

குறள் 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

விளக்கம்

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

சொற்பொருள்

துப்பு – உணவு
துப்பார்க்கு – உண்பவர்க்கு
துப்பாய – உண்ணத் தகுந்த
துப்பாக்கி – உணவை வழங்கி
துப்பார்க்கு – உண்பவர்க்கு
துப்பாய – உண்ணத் தகுந்த
தூவும் – (உணவை) பொழியும்
மழை –  மாரி

Section: Virtue
Category: Introduction
Chapter 2: The Excellence of Rain

Couplet 12

The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies

Explanation

Rain produces good food, and is itself food.

Transliteration

Thuppaarkku Thuppaaya Thuppaakki Thuppaarkku
Thuppaaya Thooum Mazhai

Glossary

துப்பு – food
துப்பார்க்கு – for eaters
துப்பாய – eatable
துப்பாக்கி – food is made
துப்பார்க்கு – for eaters
துப்பாய – eatable
தூவும் – showers
மழை – rain

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top