பால்: | அறத்துப்பால் |
இயல்: | பாயிரவியல் |
அதிகாரம் 2: | வான்சிறப்பு |
குறள் 11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
விளக்கம்
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
சொற்பொருள்
வான்நின்று – வானத்தில் இருந்து
உலகம் – பூமி
வழங்கி – கொடுத்து
வருதலால் – வருவதால்
தான்அமிழ்தம் – அதுவே ஆகச்சிறந்த உணவு
என்றுணரற் – என்று உணர
பாற்று – வேண்டிய ஒன்று
Section: | Virtue |
Category: | Introduction |
Chapter 2: | The Excellence of Rain |
Couplet 11
The world its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives
Explanation
Rain is deemed a nectar of life as its unfailing fall sustains the world.
Transliteration
Vaannindru Ulakam Vazhangi Varudhalaal
Thaanamizhdham Endrunarar Paatru
Glossary
வான்நின்று – from the sky
உலகம் – earth
வழங்கி – giving
வருதலால் – since it has been happening
தான்அமிழ்தம் – nectar (precious food)
என்றுணரற் – (rain) must be considered
பாற்று – as