திருக்குறள் 22 – துறந்தார் பெருமை| அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 3: நீத்தார் பெருமை

குறள் 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

விளக்கம்

பற்றுகளைத்‌ துறந்தவர்களின்‌ பெருமையை அளந்து கூறுதல்‌, உலகத்தில்‌ இதுவரை பிறந்து இறந்தவர்களை எண்ணிக்‌ கணக்கிடுவதைப்‌ போன்றது.

சொற்பொருள்

துறந்தார் – ஆசைகளை விட்டவர்
பெருமை – சிறப்பு
துணைக்கூறின் – அளவிட்டுக் கூறுவதாயின்
வையத்து – உலகத்தில்‌
இறந்தாரை – பிறந்து இறந்தவர்களை
எண்ணிக்கொண்டு – எண்ணிக்‌ கணக்கிடுவது
அற்று – அத்தன்மையது

Section: Virtue
Category: Introduction
Chapter 3: The Greatness of Ascetics

Couplet 22

As counting those that from the earth have passed away,
‘Tis vain attempt the might of holy men to say

Explanation

To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.

Transliteration

Thurandhaar Perumai Thunaikoorin Vaiyathu
Irandhaarai Yennikkon Datru

Glossary

துறந்தார் – holy men (who have deserted the desires)
பெருமை – greatness
துணைக்கூறின் – attempt to describe the measure
வையத்து – from the earth
இறந்தாரை – the dead
எண்ணிக்கொண்டு – counting
அற்று – it is like

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top