திருக்குறள் 23 – இருமை வகைதெரிந்து| அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 3: நீத்தார் பெருமை

குறள் 23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

விளக்கம்

பிறப்பு வீடு என்பன போல்‌ இரண்டிரண்டாக உள்ளவற்றின் வகைகளை ஆராய்ந்து அறிந்து அறத்தை மேற்கொண்டவரின்‌ பெருமையே உலகத்தில்‌ உயர்ந்தது.

சொற்பொருள்

இருமை – இரண்டு இரண்டாக இருப்பவை – பிறப்பு, வீடு (பிறப்பிலிருந்து விடுதலை)
வகைதெரிந்து – வகைகளை அறிந்து
ஈண்டு – இவ்விடத்தில் (இந்தப் பிறவியில்)
அறம் – நற்செயல்
பூண்டார் – பின்பற்றியவர்கள்
பெருமை – சிறப்பு
பிறங்கு – பிறங்கல் – உயர்ந்தது
இற்று – இத்தன்மையது (சாரியை; சான்று: பதிற்றுப்பத்து)
உலகு – உலகம்

Section: Virtue
Category: Introduction
Chapter 3: The Greatness of Ascetics

Couplet 23

Their greatness earth transcends, who, way of both worlds weighed,
In this world take their stand, in virtue’s robe arrayed

Explanation

The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).

Transliteration

Irumai Vagaitherindhu Eendu-aram Poondaar
Perumai Pirangitru Ulagu

Glossary

இருமை –  the two (birth and freedom from birth)
வகைதெரிந்து – discovered the properties
ஈண்டு – in the present birth
அறம் – virtue
பூண்டார் – followed
பெருமை – greatness
பிறங்கிற்று – shines beyond all others
உலகு – world

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top