பால்: | அறத்துப்பால் |
இயல்: | இல்லறவியல் |
அதிகாரம் 8: | அன்புடைமை |
குறள் 74
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு
விளக்கம்
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லோரிடத்தும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
சொற்பொருள்
அன்புஈனும் – அன்பு கொடுக்கும்
ஆர்வம் – விருப்பம்
உடைமை – தன்மை
அதுஈனும் – அது கொடுக்கும்
நண்புஎன்னும் – நட்பு என்னும்
நாடா – அளவற்ற
சிறப்பு – பெருமை
Section: | Virtue |
Category: | Domestic Virtue |
Chapter 8: | Possession of Love |
Couplet 74
From love fond yearning springs for union sweet of minds;
And that the bond of rare excelling friendship binds
Explanation
Love begets desire: and that (desire) begets the immeasurable excellence of friendship.
Transliteration
Anbu-eenum Aarvam Udaimai Adhu-eenum
Nanbu-ennum Nadaa Chirappu
Glossary
அன்புஈனும் – love brings
ஆர்வம் – desire
உடைமை – possession
அதுஈனும் – it brings
நண்புஎன்னும் – (known as) friendship
நாடா – the immeasurable
சிறப்பு – excellence