தனித் தனி பாகங்களாக இருக்கும் முகத்தின் பகுதிகளுக்கு வண்ணம் தீட்டி ஒட்டும் பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையானவை:
? ஊது பை (பலூன்) ?
? பயிற்சித்தாள் – முகம் ?
? வண்ணங்கள் ?
⌸ பசைக் குச்சி ⌸
✂️ கத்தரிக்கோல் ✂️
செயல்முறை:
- கண், காது, மூக்கு, வாய், தலைமுடி, புருவம் ஆகிய பகுதிகளுக்கு வண்ணமிடவும்.
- வண்ணமிட்ட பாகங்களை தனித்தனியே வெட்டி வைக்கவும்.
- ஊது பையை (பலூன்) முகம் அளவிற்கு ஊதி காற்று வெளிவராதபடி முடித்து வைக்கவும்.
- முதலில் தலைமுடிக்கு பசை தடவி ஊது பையின் மீது ஒட்டவும். இவ்வாறு செய்வதால் மற்ற பகுதிகளைச் சரியான இடத்தில் ஒட்டுவதற்கு எளிமையாக இருக்கும்.
- அதேபோன்று முகத்தின் பிற பாகங்களுக்கும் பசை தடவி ஊது பையின் மீது ஒட்டவும். பறக்கும் முகம் தயார்!
இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.