கத்தரிக்கோல் பயன்படுத்தி வெட்டுவதும், வெட்டிய பகுதிகளை ஒட்டுவதும் சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் வண்ணமிடுவதைப் பற்றிச் சொல்லவா வேண்டும்!
வானவில் பாகங்களுக்கும் மேகத்திற்கும் வண்ணமிட்டு வெட்டி ஒட்டும் பயிற்சி இது. இந்தப் பயிற்சியின் மூலம் குழந்தைகள் வானவில்லின் வண்ணங்களையும் அதன் வரிசையையும் எளிமையாகக் கற்றுக்கொள்ளலாம்.
தேவையானவை:
? பயிற்சித்தாள் – வானவில் ?
? வண்ணங்கள் ?
⌸ பசைக் குச்சி ⌸
✂️ கத்தரிக்கோல் ✂️
செயல்முறை:
- வானவில்லின் பகுதிகளுக்கு ஒவ்வொன்றாக வண்ணமிடவும்.
- மேகம், வாய் ஆகிவற்றிற்கும் வண்ணமிடவும்.
- வானவில்லின் பாகங்களையும், மேகத்தையும் தனித்தனியே வெட்டவும்.
- வெட்டிய வண்ணங்களை சிவப்பு முதல் ஊதா வரை ? வரிசையாக வைக்கவும்.
- மேகத்தை பின்புறமாக திருப்பிவைத்து கீழ்ப்பகுதியில் பசை தடவி வானவில் வரிசை மீது ஒட்டவும். வானவில் தயார்!
? வானவில் வரிசை ?
- சிவப்பு ?
- காவி ?
- மஞ்சள் ?
- பச்சை ?
- வெளிர் நீலம் ?
- அடர் நீலம் ?
- ஊதா ?
இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.