க வரிசை எழுத்துகளை வரிசையாக நிரப்பும் பயிற்சி. ஒவ்வொரு ககர வரிசை எழுத்திற்கும் அதைத் தொடக்க ஒலியாகக் கொண்டவற்றின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்து அதன் பெயரைக் கூறிக்கொண்டே வரிசையாக நிரப்ப வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் குழந்தைகள் ஒவ்வொரு உயிர் ஒலிக்கும் ஏற்ற க வரிசை உயிர்மெய்யை நன்றாக அடையாளம் காண்பார்கள். வண்ண வண்ண படங்கள் கொண்ட இந்தப் பயிற்சித்தாள் சிறுவர்களுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க உதவும்.
247 தமிழ் எழுத்துகளையும் முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை செல்லவும்.
இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.