கடவுள் வாழ்த்து

திருக்குறள் 5 – இருள்சேர் இருவினையும் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு விளக்கம் கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. சொற்பொருள் இருள்சேர் – துன்பம் தரக்கூடியஇருவினையும் – அறியாமையால் விளையும் இருவகை வினையும்சேரா – நெருங்காதுஇறைவன் – கடவுள்பொருள்சேர் – உண்மை நிலையை உணர்ந்துபுகழ்புரிந்தார் – புகழை விரும்பி அன்பு செலுத்துகிறன்றவர்மாட்டு –  இடத்தில் Section: Virtue Category: […]

திருக்குறள் 5 – இருள்சேர் இருவினையும் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து Read More »

திருக்குறள் 4 – வேண்டுதல் வேண்டாமை | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் 4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல விளக்கம் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்பொழுதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை. சொற்பொருள் வேண்டுதல் – விருப்புவேண்டாமை – வெறுப்புஇலானடி – இல்லாதவனுடைய திருவடிசேர்ந்தார்க்கு – அடைந்தவர்க்குயாண்டும் – எப்பொழுதும்இடும்பை – துன்பம்இல – இல்லை Section: Virtue Category: Introduction Chapter 1: Praise of God

திருக்குறள் 4 – வேண்டுதல் வேண்டாமை | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து Read More »

திருக்குறள் 3 – மலர்மிசை ஏகினான் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார் விளக்கம் அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் பெருமைமிக்க திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார். சொற்பொருள் மலர்மிசை – உள்ளமாகிய மலரின் மீதுஏகினான் – விற்றிருக்கும்மாணடி – பெருமைமிக்க திருவடிசேர்ந்தார் – பொருந்தி நினைக்கின்றவர்நிலமிசை – இன்ப உலகில்நீடு – நிலைத்துவாழ்வார் – வாழ்வார்கள் Section: Virtue Category: Introduction

திருக்குறள் 3 – மலர்மிசை ஏகினான் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து Read More »

திருக்குறள் 2

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் விளக்கம் இறைவனின் நல்ல திருவடிகளை வணங்காதவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? சொற்பொருள் கற்றதனால் – கல்வி அறிவினால்ஆய – பெறக்கூடியபயனென்கொல் – பயன் என்ன?வாலறிவன் – அனைத்தும் அறிந்த இறைவன்நற்றாள் – நல்ல திருவடிதொழாஅர் – வணங்கவில்லைஎனின் – எனில் Section: Virtue Category: Introduction Chapter 1: Praise of

திருக்குறள் 2 Read More »

error:
Scroll to Top