திருக்குறள் 5 – இருள்சேர் இருவினையும் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து

குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

விளக்கம்

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

சொற்பொருள்

இருள்சேர் – துன்பம் தரக்கூடிய
இருவினையும் – அறியாமையால் விளையும் இருவகை வினையும்
சேரா – நெருங்காது
இறைவன் – கடவுள்
பொருள்சேர் – உண்மை நிலையை உணர்ந்து
புகழ்புரிந்தார் – புகழை விரும்பி அன்பு செலுத்துகிறன்றவர்
மாட்டு –  இடத்தில்

Section: Virtue
Category: Introduction
Chapter 1: Praise of God

Couplet 5

The men, who on the ‘King’s’ true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well

Explanation

The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.

Transliteration

Irulser Iruvinaiyum Sera Iraivan
Porulser Pugazhpurindhaar Maattu

Glossary

இருள்சேர் – puts in darkness (sorrow)
இருவினையும் – fruit of deeds (ill or well) 
சேரா – never adheres
இறைவன் – God
பொருள்சேர் – understood the delight
புகழ்புரிந்தார் – who truly praised
மாட்டு – to those

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top