திருக்குறள் 4 – வேண்டுதல் வேண்டாமை | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து

குறள் 4

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

விளக்கம்

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்பொழுதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

சொற்பொருள்

வேண்டுதல் – விருப்பு
வேண்டாமை – வெறுப்பு
இலானடி – இல்லாதவனுடைய திருவடி
சேர்ந்தார்க்கு – அடைந்தவர்க்கு
யாண்டும் – எப்பொழுதும்
இடும்பை – துன்பம்
இல – இல்லை

Section: Virtue
Category: Introduction
Chapter 1: Praise of God

Couplet 4

His foot, ‘Whom want affects not, irks not grief,’ who gain
Shall not, through every time, of any woes complain

Explanation

Those who surrender at the feet of the one, who doesn’t have any wants or hates, will never have any hassles anywhere.

Transliteration

Vendudhal Vendamai Ilaanadi Sernthaarkku
Yaandum Idumbai Ila

Glossary

வேண்டுதல் – wants
வேண்டாமை – hates
இலானடி – the feet of the one, who doesn’t have
சேர்ந்தார்க்கு – who surrender
யாண்டும் – all the time
இடும்பை – hassle (sorrow)
இல – no

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top