திருக்குறள் 2

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து

குறள் 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

விளக்கம்

இறைவனின் நல்ல திருவடிகளை வணங்காதவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்?

சொற்பொருள்

கற்றதனால் – கல்வி அறிவினால்
ஆய – பெறக்கூடிய
பயனென்கொல் – பயன் என்ன?
வாலறிவன் – அனைத்தும் அறிந்த இறைவன்
நற்றாள் – நல்ல திருவடி
தொழாஅர் – வணங்கவில்லை
எனின் – எனில்

Section: Virtue
Category: Introduction
Chapter 1: Praise of God

Couplet 2

No fruit have men of all their studied lore;
Save they the “Purely Wise One’s’ feet adore

Explanation

What Profit have those derived from learning, who worship not the good feet of Him (God) who is possessed of pure knowledge?

Transliteration

Katradhanaal Aaya Payanenkol Valarivan
Natraal Thozhaaar Enin

Glossary

கற்றதனால் – from the knowledge acquired
ஆய – could be gained
பயனென்கொல் – What fruitfulness?
வாலறிவன் – purely wise God
நற்றாள் – good feet
தொழாஅர் – does not worship
எனின் – if

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top