நீத்தார் பெருமை

திருக்குறள் 30 – அந்தணர் என்போர் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 3: நீத்தார் பெருமை குறள் 30 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான் விளக்கம் எல்லா உயிர்களிடத்திலும்‌ செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால்‌ அறவோரே அந்தணர்‌ எனப்படுவோர்‌ ஆவர்‌. சொற்பொருள் அந்தணர் – அந்தத்தை உணர்ந்தவர்என்போர் – எனப்படுபவர்அறவோர் – அறம் செய்பவர்மற்றெவ்வுயிர்க்கும் – மற்ற எந்த உயிர்க்கும்தண்மை – குளிர்ச்சி; சாந்தம்செந்தண்மை – செம்மையான சாந்தம்பூண்டு – மேற்கொண்டுஒழுகலான் – தொடந்து செய்து வருவதால் (வேற்றுமை உருபு ‘ஆல்’ என்பது சங்க […]

திருக்குறள் 30 – அந்தணர் என்போர் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை Read More »

திருக்குறள் 29 – குணமென்னும் குன்றேறி | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 3: நீத்தார் பெருமை குறள் 29 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது விளக்கம் நல்ல பண்புகளாகிய மலையின்மேல்‌ ஏறி நின்ற பெரியோர்‌, ஒரு கணப்பொழுதே சினம்‌ கொள்வார்‌ ஆயினும்‌ அதிலிருந்து ஒருவரைக்‌ காத்தல்‌ அரிதாகும்‌. சொற்பொருள் குணமென்னும் – நல்ல குணம் என்னும்குன்றேறி – குன்றின் மீது ஏறிநின்றார் – நின்ற சான்றோர்வெகுளி – சினம்; கோபம்கணமேயும் – ஒரு கணப்பொழுது என்றாலும்காத்தல் – காப்பாற்றுவதுஅரிது – கடினம் Section: Virtue

திருக்குறள் 29 – குணமென்னும் குன்றேறி | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை Read More »

திருக்குறள் 28 – நிறைமொழி மாந்தர் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 3: நீத்தார் பெருமை குறள் 28 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும் விளக்கம் பயன்‌ நிறைந்த மொழிகளில்‌ வல்ல சான்றோரின்‌ பெருமையை, உலகத்தில்‌ அழியாமல்‌ விளங்கும்‌ அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்‌. சொற்பொருள் நிறைமொழி – பயன்‌ நிறைந்த மொழிகளில்‌ வல்லமை பெற்றமாந்தர் – மனிதர்கள்பெருமை – சிறப்புநிலத்து – உலகத்தின்மறைமொழி – புனித நூல்காட்டிவிடும் – காண்பித்து விடும் Section: Virtue Category: Introduction Chapter 3: The Greatness of

திருக்குறள் 28 – நிறைமொழி மாந்தர் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை Read More »

திருக்குறள் 27 – சுவைஒளி ஊறுஓசை | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 3: நீத்தார் பெருமை குறள் 27 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்வகைதெரிவான் கட்டே உலகு விளக்கம் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்‌ என்று சொல்லப்படும்‌ ஐந்தன்‌ வகைகளையும்‌ ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில்‌ உள்ளது உலகம்‌. சொற்பொருள் சுவை – ருசி; நாவின் உணர்வுஒளி – பார்வை; கண்களின் உணர்வு‌ஊறு – தீண்டல்; உடலின் உணர்வு‌ஓசை – ஒலி; காதுகளின் உணர்வு‌நாற்றம் – மணம்; மூக்கின் உணர்வு‌என – ஆகியஐந்தின் –

திருக்குறள் 27 – சுவைஒளி ஊறுஓசை | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை Read More »

திருக்குறள் 26 – செயற்கரிய செய்வார் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 3: நீத்தார் பெருமை குறள் 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார் விளக்கம் செய்வதற்கு அருமையான செயல்களைச்‌ செய்ய வல்லவரே பெரியோர்‌. செய்வதற்கு அரிய செயல்களைச்‌ செய்ய இயலாதவர்‌ சிறியோர்‌. சொற்பொருள் செயற்கரிய – செய்வதற்கு அருமையானசெய்வார் – செயல்களைச்‌ செய்ய வல்லவர்பெரியர் – பெரியவர்‌சிறியர் – சிறியவர்‌செயற்கரிய – செய்வதற்கு அருமையானசெய்கலாதார் – செயல்களைச்‌ செய்ய இயலாதவர் Section: Virtue Category: Introduction Chapter 3: The Greatness

திருக்குறள் 26 – செயற்கரிய செய்வார் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை Read More »

error:
Scroll to Top