திருக்குறள் 28 – நிறைமொழி மாந்தர் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 3: நீத்தார் பெருமை

குறள் 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

விளக்கம்

பயன்‌ நிறைந்த மொழிகளில்‌ வல்ல சான்றோரின்‌ பெருமையை, உலகத்தில்‌ அழியாமல்‌ விளங்கும்‌ அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்‌.

சொற்பொருள்

நிறைமொழி – பயன்‌ நிறைந்த மொழிகளில்‌ வல்லமை பெற்ற
மாந்தர் – மனிதர்கள்
பெருமை – சிறப்பு
நிலத்து – உலகத்தின்
மறைமொழி – புனித நூல்
காட்டிவிடும் – காண்பித்து விடும்

Section: Virtue
Category: Introduction
Chapter 3: The Greatness of Ascetics

Couplet 28

The might of men whose word is never vain,
The ‘secret word’ shall to the earth proclaim

Explanation

The hidden words of the men whose words are full of effect, will show their greatness to the world.

Transliteration

Niraimozhi Maandhar Perumai Nilathu
Maraimozhi Kaatti Vidum

Glossary

நிறைமொழி – words with full of effect
மாந்தர் – people
பெருமை – greatness
நிலத்து – of the world
மறைமொழி – holy book
காட்டிவிடும் – will show

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top