திருக்குறள் 29 – குணமென்னும் குன்றேறி | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 3: நீத்தார் பெருமை

குறள் 29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

விளக்கம்

நல்ல பண்புகளாகிய மலையின்மேல்‌ ஏறி நின்ற பெரியோர்‌, ஒரு கணப்பொழுதே சினம்‌ கொள்வார்‌ ஆயினும்‌ அதிலிருந்து ஒருவரைக்‌ காத்தல்‌ அரிதாகும்‌.

சொற்பொருள்

குணமென்னும் – நல்ல குணம் என்னும்
குன்றேறி – குன்றின் மீது ஏறி
நின்றார் – நின்ற சான்றோர்
வெகுளி – சினம்; கோபம்
கணமேயும் – ஒரு கணப்பொழுது என்றாலும்
காத்தல் – காப்பாற்றுவது
அரிது – கடினம்

Section: Virtue
Category: Introduction
Chapter 3: The Greatness of Ascetics

Couplet 29

The wrath ‘tis hard e’en for an instant to endure,
Of those who virtue’s hill have scaled, and stand secure

Explanation

The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.

Transliteration

Gunamennum Kundreri Nindraar Veguli
Ganameyum Kaathal Aridhu

Glossary

குணமென்னும் – of good character
குன்றேறி – climbed the hill-top
நின்றார் – one who stood
வெகுளி – anger
கணமேயும் – even for a moment
காத்தல் – to resist
அரிது – hard

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top