திருக்குறள்

திருக்குறள் 31 – சிறப்புஈனும் செல்வமும் | அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

    பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 4: அறன் வலியுறுத்தல் குறள் 31 சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு விளக்கம் அறம் சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிருள்ள மனிதருக்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு எதுவாக இருக்க முடியும்? சொற்பொருள் சிறப்புஈனும் – சிறப்பு அளிக்கும்செல்வமும் ஈனும் – செல்வமும் அளிக்கும்அறத்தினூஉங்கு –  அத்தகைய அறத்தை விடஆக்கம் – நன்மையானதுஎவனோ – வேறு எதுவாக இருக்க முடியும்உயிர்க்கு […]

திருக்குறள் 31 – சிறப்புஈனும் செல்வமும் | அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல் Read More »

திருக்குறள் 80 – அன்பின் வழியது| அதிகாரம் 8 – அன்புடைமை

பால்: அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம் 8: அன்புடைமை குறள் 80 அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு விளக்கம் அன்பின் வழியில் வாழ்பவர்க்கு இருக்கும் உடம்பே உயிருள்ள உடம்பு ஆகும். ஆனால் அன்பு இல்லாதவர்க்கு இருக்கும் உடம்பு, எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்ட வெற்று உடம்பே ஆகும். சொற்பொருள் அன்பின் – அன்பின்வழியது – வழியில் வாழும் உடல்உயிர்நிலை – உயிருள்ள நிலைஅஃதிலார்க்கு – அஃது (அன்பு) இல்லாதவர்க்குஎன்புதோல் – எலும்பின் மேல் தோல்போர்த்த

திருக்குறள் 80 – அன்பின் வழியது| அதிகாரம் 8 – அன்புடைமை Read More »

திருக்குறள் 79 – புறத்துறுப் பெல்லாம் | அதிகாரம் 8 – அன்புடைமை

பால்: அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம் 8: அன்புடைமை குறள் 79 புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு விளக்கம் உடம்பின் உள் உறுப்பாகிய உள்ளத்தில் அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் வெளி உறுப்புகள் எல்லாம் என்ன பயன் செய்யும். சொற்பொருள் புறத்து – வெளியில் இருக்கும்உறுப்பெல்லாம் – உறுப்புகள் எல்லாம்எவன்செய்யும் – இருந்தும் என்ன பயன்?யாக்கை – உடல்அகத்துறுப்பு – உள்ளம் என்னும் உள் உறுப்பில்அன்பிலவர்க்கு – அன்பு இல்லாதவர்க்கு Section: Virtue Category: Domestic Virtue Chapter

திருக்குறள் 79 – புறத்துறுப் பெல்லாம் | அதிகாரம் 8 – அன்புடைமை Read More »

திருக்குறள் 78 – அன்பகத் தில்லா | அதிகாரம் 8 – அன்புடைமை

பால்: அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம் 8: அன்புடைமை குறள் 78 அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று விளக்கம் உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழும் வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் உலர்ந்த மரம் தளிர்த்தாற் போன்றது. சொற்பொருள் அன்பு – அன்புஅகத்தில்லா – உள்ளத்தில் இல்லாமல்உயிர்வாழ்க்கை – வாழும் வாழ்க்கைவன்பாற்கண் – வளமற்ற பாலைநிலத்தில்வற்றல் மரம் – உலர்ந்த மரம்தளிர்த்தற்று – தளிர்த்தாற் போன்றது Section: Virtue Category: Domestic Virtue Chapter 8: Possession of

திருக்குறள் 78 – அன்பகத் தில்லா | அதிகாரம் 8 – அன்புடைமை Read More »

திருக்குறள் 77 – என்பி லதனை | அதிகாரம் 8 – அன்புடைமை

பால்: அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம் 8: அன்புடைமை குறள் 77 என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம் விளக்கம் எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். சொற்பொருள் என்பில் – எலும்பு இல்லாதஅதனை – பொருளை (புழுவை)வெயிற்போல – வெயில் (வாட்டுவது) போல்காயுமே – வருத்துமேஅன்பில் – அன்பு இல்லாதஅதனை – பொருளை (மனிதரை)அறம் – நீதி Section: Virtue Category:

திருக்குறள் 77 – என்பி லதனை | அதிகாரம் 8 – அன்புடைமை Read More »

error:
Scroll to Top