பால்: | அறத்துப்பால் |
இயல்: | இல்லறவியல் |
அதிகாரம் 8: | அன்புடைமை |
குறள் 80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
விளக்கம்
அன்பின் வழியில் வாழ்பவர்க்கு இருக்கும் உடம்பே உயிருள்ள உடம்பு ஆகும். ஆனால் அன்பு இல்லாதவர்க்கு இருக்கும் உடம்பு, எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்ட வெற்று உடம்பே ஆகும்.
சொற்பொருள்
அன்பின் – அன்பின்
வழியது – வழியில் வாழும் உடல்
உயிர்நிலை – உயிருள்ள நிலை
அஃதிலார்க்கு – அஃது (அன்பு) இல்லாதவர்க்கு
என்புதோல் – எலும்பின் மேல் தோல்
போர்த்த – போர்த்தப்பட்ட
உடம்பு – உடல்
Section: | Virtue |
Category: | Domestic Virtue |
Chapter 8: | Possession of Love |
Couplet 80
Bodies of loveless men are bony framework clad with skin;
Then is the body seat of life, when love resides within
Explanation
That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.
Transliteration
Arathirke Anbu Saarbenba Ariyaar
Marathirkum Akdhe Thunai
Glossary
அன்பின் – with love
வழியது – (the body) which is inspired
உயிர்நிலை – living soul
அஃதிலார்க்கு – whereas people with no love
என்புதோல் – bone with skin
போர்த்த – overlaid with
உடம்பு – body