பால்: | அறத்துப்பால் |
இயல்: | இல்லறவியல் |
அதிகாரம் 8: | அன்புடைமை |
குறள் 78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று
விளக்கம்
உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழும் வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் உலர்ந்த மரம் தளிர்த்தாற் போன்றது.
சொற்பொருள்
அன்பு – அன்பு
அகத்தில்லா – உள்ளத்தில் இல்லாமல்
உயிர்வாழ்க்கை – வாழும் வாழ்க்கை
வன்பாற்கண் – வளமற்ற பாலைநிலத்தில்
வற்றல் மரம் – உலர்ந்த மரம்
தளிர்த்தற்று – தளிர்த்தாற் போன்றது
Section: | Virtue |
Category: | Domestic Virtue |
Chapter 8: | Possession of Love |
Couplet 78
The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow
Explanation
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.
Transliteration
Anbaga Thillaa Uyirvaazhkai Vanpaarkan
Vatral Marandhalir Thatru
Glossary
அன்பு – love
அகத்தில்லா – a soul without (love)
உயிர்வாழ்க்கை – the state of being in life
வன்பாற்கண் – in the dry desert
வற்றல் மரம் – withered tree
தளிர்த்தற்று – it’s like the sprouting (of a waste tree)