திருக்குறள் 79 – புறத்துறுப் பெல்லாம் | அதிகாரம் 8 – அன்புடைமை

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம் 8: அன்புடைமை

குறள் 79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு

விளக்கம்

உடம்பின் உள் உறுப்பாகிய உள்ளத்தில் அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் வெளி உறுப்புகள் எல்லாம் என்ன பயன் செய்யும்.

சொற்பொருள்

புறத்து – வெளியில் இருக்கும்
உறுப்பெல்லாம் – உறுப்புகள் எல்லாம்
எவன்செய்யும் – இருந்தும் என்ன பயன்?
யாக்கை – உடல்
அகத்துறுப்பு – உள்ளம் என்னும் உள் உறுப்பில்
அன்பிலவர்க்கு – அன்பு இல்லாதவர்க்கு

Section: Virtue
Category: Domestic Virtue
Chapter 8: Possession of Love

Couplet 79

Though every outward part complete, the body’s fitly framed;
What good, when soul within, of love devoid, lies halt and maimed

Explanation

Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.

Transliteration

Purath Thuruppellaam Evanseyyum Yaakkai
Agathuruppu Anbi Lavarku

Glossary

புறத்து – external
உறுப்பெல்லாம் – all the parts (of the body)
எவன்செய்யும் – what good will it make?
யாக்கை – body
அகத்துறுப்பு – internal part (heart)
அன்பிலவர்க்கு – loveless people

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top