பால்: | அறத்துப்பால் |
இயல்: | இல்லறவியல் |
அதிகாரம் 8: | அன்புடைமை |
குறள் 77
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
விளக்கம்
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
சொற்பொருள்
என்பில் – எலும்பு இல்லாத
அதனை – பொருளை (புழுவை)
வெயிற்போல – வெயில் (வாட்டுவது) போல்
காயுமே – வருத்துமே
அன்பில் – அன்பு இல்லாத
அதனை – பொருளை (மனிதரை)
அறம் – நீதி
Section: | Virtue |
Category: | Domestic Virtue |
Chapter 8: | Possession of Love |
Couplet 77
As sun’s fierce ray dries up the boneless things,
So loveless beings virtue’s power to nothing brings
Explanation
Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone (worm).
Transliteration
Enbi Ladhanai Veyirpola Kaayumey
Anbi Ladhanai Aram
Glossary
என்பில் – boneless
அதனை – thing (worm)
வெயிற்போல – the same way as the sun’s ray (affects)
காயுமே – will affect
அன்பில் – loveless
அதனை – thing (human being)
அறம் – virtue