பால்: | அறத்துப்பால் |
இயல்: | பாயிரவியல் |
அதிகாரம் 3: | நீத்தார் பெருமை |
குறள் 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
விளக்கம்
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
சொற்பொருள்
உரன் – அறிவு; திண்மை; மனக்கட்டுப்பாடு
உரனென்னும் – அறிவு என்னும்
தோட்டி – கருவி
தோட்டியான் – கருவியால் (வேற்றுமை உருபு ‘ஆல்’ என்பது சங்க காலத்தில் ‘ஆன்’ என்று பயன்படுத்தப்பட்டது; மேலும் விளக்கம் இங்கே..)
ஓரைந்தும் – ஐம்பொறிகளையும்
காப்பான் – காக்க வல்லவன்
வரன் – வரம்
வரனென்னும் – வரம் என்னும்
வைப்பு – வீடு (பிறப்பிலிருந்து விடுதலை); மேலான் இடம்
வைப்பிற்கோர் – பிறப்பிலிருந்து விடுதலைக்கு ஒரு
வித்து – விதை
ஐம்பொறிகள்
- மெய் – தொடுதல்
- வாய் – சுவைத்தல்
- கண் – பார்த்தல்
- மூக்கு – நுகர்தல்
- செவி – கேட்டல்
Section: | Virtue |
Category: | Introduction |
Chapter 3: | The Greatness of Ascetics |
Couplet 24
He, who with firmness, curb the five restrains,
Is seed for soil of yonder happy plains
Explanation
He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.
Transliteration
Uranennum Thottiyaan Orainthum Kaappaan
Varanennum Vaipirkor Vithu
Glossary
உரன் – knowledge; self-control
உரனென்னும் – so called knowledge
தோட்டி – tool
தோட்டியான் – using the tool
ஓரைந்தும் – the five senses
காப்பான் – the one who controls
வரன் – blessing
வரனென்னும் – so called blessing
வைப்பு – world of heaven
வைப்பிற்கோர் – in the world of heaven
வித்து – seed
The five senses
- body surface – touch
- mouth – taste
- eye – see
- nose – smell
- ear – hear