பால்: | அறத்துப்பால் |
இயல்: | இல்லறவியல் |
அதிகாரம் 8: | அன்புடைமை |
குறள் 75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
விளக்கம்
உலகில் இன்புற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு கொண்டு வாழும் வாழ்கையின் பயன் என்று கூறலாம்.
சொற்பொருள்
அன்புற்று – அன்பு கொண்டு
அமர்ந்த – பொருந்தி வாழ்ந்த
வழக்கென்ப – வாழ்க்கையின் பயன் என்பர்
வையகத்து – உலகில்
இன்புற்றார் – இன்பம் அடைந்தவர்
எய்தும் – பெறும்
சிறப்பு – பெருமை
Section: | Virtue |
Category: | Domestic Virtue |
Chapter 8: | Possession of Love |
Couplet 75
Sweetness on earth and rarest bliss above,
These are the fruits of tranquil life of love
Explanation
The excellence that one gains through the experience of bliss on earth is the fruit of tranquil life of love.
Transliteration
Anbutru Amarndha Vazhakkenba Vaiyagathu
Inbutraar Yeidhum Sirappu
Glossary
அன்புற்று – (with) love
அமர்ந்த – lived with
வழக்கென்ப – fruit of tranquil life
வையகத்து – on earth
இன்புற்றார் – one who experiences bliss
எய்தும் – gains
சிறப்பு – excellence