திருக்குறள் 76 – அறத்திற்கே அன்பு | அதிகாரம் 8 – அன்புடைமை

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம் 8: அன்புடைமை

குறள் 76

அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

விளக்கம்

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர். ஆனால், வீரத்திற்கும் அன்பு துணையாகும்.

சொற்பொருள்

அறத்திற்கே – அறத்திற்கு மட்டும்
அன்பு – நேயம்
சார்பென்ப – துணை என்பர்
அறியார் – அறியாதவர்
மறத்திற்கும் – வீரத்திற்கும்
அஃதே – அதுவே
துணை – உதவும்

Section: Virtue
Category: Domestic Virtue
Chapter 8: Possession of Love

Couplet 76

The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain

Explanation

The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.

Transliteration

Arathirke Anbu Saarbenba Ariyaar
Marathirkum Akdhe Thunai

Glossary

அறத்திற்கே – to virtue only
அன்பு – love
சார்பென்ப – say that is an ally
அறியார் – ignorant
மறத்திற்கும் – for valor also
அஃதே – the same (love)
துணை – helps

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top