திருக்குறள் 14 – ஏரின் உழாஅர் | அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 2: வான்சிறப்பு

குறள் 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

விளக்கம்

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உணவுப் பொருள்களை உண்டாக்கும் உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

சொற்பொருள்

ஏரின் – கலப்பை கொண்டு
உழாஅர் – உழமாட்டார்
உழவர் – விவசாயி
புயல்என்னும் – மழை என்னும்
வாரி – செல்வம்
வளங்குன்றி – வளம் குறைந்த
கால் – காலத்தில்

Section: Virtue
Category: Introduction
Chapter 2: The Excellence of Rain

Couplet 14

If clouds their wealth of waters fail on earth to pour,
The ploughers plough with oxen’s sturdy team no more

Explanation

If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.

Transliteration

Erin Uzhaaar Uzhavar Puyalennum
Vaari Valankundrik Kaal

Glossary

ஏரின் – with plough
உழாஅர் – will stop the farming activity
உழவர் – farmer
புயல்என்னும் – the rain
வாரி – wealth (rain)
வளங்குன்றி – amount of rainfall reduces
கால் – the time when

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top