திருக்குறள் 16 – விசும்பின் துளிவீழின் | அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 2: வான்சிறப்பு

குறள் 16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

விளக்கம்

வானத்திலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி, உலகத்தில் ஓரறிவு உயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

சொற்பொருள்

விசும்பின் – வானத்திலிருந்து (வேற்றுமை உருபு ‘இன்’ என்பது சங்க காலத்தில் ‘இலிருந்து’ எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது; மேலும் விளக்கம் இங்கே..)
துளிவீழின் – மழைத்துளி விழுந்தால்
அல்லால் – அன்றி
மற்று ஆங்கே – அத்துடன் அங்கே
பசும்புல் – பசுமையான புல்
தலைகாண்பு – துளிர்விடுவதைப் பார்ப்பது
அரிது – கடினம்

Section: Virtue
Category: Introduction
Chapter 2: The Excellence of Rain

Couplet 16

If from the clouds no drops of rain are shed;
‘Tis rare to see green herb lift up its head

Explanation

If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.

Transliteration

Visumbin Thuliveezhin Allaalmat Raange
Pasumpul Thalaikaan Baridhu

Glossary

விசும்பின் – from the sky
துளிவீழின் – if raindrop drips
அல்லால் – else
மற்று ஆங்கே –  as a consequence 
பசும்புல் – green grass
தலைகாண்பு – to see the sprout (of grass)
அரிது – hard

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top