திருக்குறள் 17 – நெடுங்கடலும் தன்நீர்மை | அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 2: வான்சிறப்பு

குறள் 17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

விளக்கம்

மேகம் கடலிலிருந்து நீரை முகந்து அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால் பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

சொற்பொருள்

நெடுங்கடலும் – பெரிய கடலும்
தன்நீர்மை – தன் நீர்த்தன்மை (வளம்)
குன்றும் – குறையும்
எழிலி – மேகம்
தடிந்து – குறைத்து
தடிந்தெழிலி – மேகம் முகந்து (கடலிலிருந்து நீரை)
தான்நல்காது – மழையைப் பொழியாமல்
ஆகி – இருந்து
விடின் – விடும் எனின்

Section: Virtue
Category: Introduction
Chapter 2: The Excellence of Rain

Couplet 17

If clouds restrain their gifts and grant no rain,
The treasures fail in ocean’s wide domain

Explanation

Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).

Transliteration

Nedungadalum Thanneermai Kundrum Thadindhezhili
Thaannalgaa Dhaagi Vidin

Glossary

நெடுங்கடலும் – big sea
தன்நீர்மை – its liquid state (wealth of the sea)
குன்றும் – will be reduced
எழிலி – cloud
தடிந்து – drawn
தடிந்தெழிலி – clouds drawn (water from the sea)
தான்நல்காது – fails to pour rain
ஆகி – became
விடின் – if it happens

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top