பால்: | அறத்துப்பால் |
இயல்: | பாயிரவியல் |
அதிகாரம் 2: | வான்சிறப்பு |
குறள் 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
விளக்கம்
மழை பெய்யாமல் வறண்டுபோனால் இவ்வுலகத்தில் வானோர்க்காக சிறப்புடன் நிகழும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
சொற்பொருள்
சிறப்பொடு – சிறப்போடு (வேற்றுமை உருபு ‘ஓடு’ என்பது சங்க காலத்தில் ‘ஒடு’ என்று பயன்படுத்தப்பட்டது; மேலும் விளக்கம் இங்கே..)
பூசனை – வழிபாடு
செல்லாது – நடைபெறாது
வானம் – விசும்பு
வறக்குமேல் – மழை பெய்யாமல் வறண்டுபோனால்
வானோர்க்கும் – வானுலகத்து தெய்வங்களுக்கும்
ஈண்டு – இங்கு (இவ்வுலகத்தில்)
Section: | Virtue |
Category: | Introduction |
Chapter 2: | The Excellence of Rain |
Couplet 18
If heaven grow dry, with feast and offering never more,
Will men on earth the heavenly ones adore
Explanation
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.
Transliteration
Sirappodu Poosanai Sellaadhu Vaanam
Varakkumel Vaanorkkum Eendu
Glossary
சிறப்பொடு – special
பூசனை – worship
செல்லாது – will not occur
வானம் – sky
வறக்குமேல் – if it becomes dry
வானோர்க்கும் – to the celestials
ஈண்டு – in this world