திருக்குறள் 19 – தானம் தவம்இரண்டும்| அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 2: வான்சிறப்பு

குறள் 19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

விளக்கம்

மழை பெய்யவில்லை எனில்‌, இந்தப்‌ பெரிய உலகத்தில்‌ பிறர்பொருட்டுச்‌ செய்யும்‌ தானமும்‌, தம்‌ பொருட்டுச்‌ செய்யும்‌ தவமும்‌ இல்லாமல் போகும்‌.

சொற்பொருள்

தானம் – பிறர்க்குக் கொடுத்தல்
தவம் – சுய ஒழுக்கம்
தானம் – தானம், தவம் ஆகிய இரண்டும்
தங்கா – இல்லாமல் போகும்
வியன்உலகம் – விரிந்த உலகம்
வானம் – விசும்பு
வழங்காது – மழையைப் பொழியாது
எனின் – எனில்

Section: Virtue
Category: Introduction
Chapter 2: The Excellence of Rain

Couplet 19

If heaven its watery treasures ceases to dispense,
Through the wide world cease gifts, and deeds of ‘penitence’

Explanation

If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.

Transliteration

Dhaanam Thavamirandum Thangaa Viyanulagam
Vaanam Vazhangaa Dhenin

Glossary

தானம் – donation
தவம் – self discipline
இரண்டும் – the two (donation and self discipline)
தங்கா – cease
வியன்உலகம் – the wide world
வானம் – sky
வழங்காது – it does not give (rain)
எனின் – if

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top