திருக்குறள் 20 – நீர்இன்று அமையாது| அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 2: வான்சிறப்பு

குறள் 20

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

விளக்கம்

எவராயினும்‌ நீர்‌ இல்லாமல்‌ உலக வாழ்க்கை நடைபெறாது என்றால்‌, மழை இல்லாமல்‌ ஒழுக்கமும்‌ நிலைபெறாது‌.

சொற்பொருள்

நீர்இன்று – நீர் இன்றி
அமையாது – நிகழாது
உலகெனின் – உலகம் எனின்
யார்யார்க்கும் – எவராயினும்‌
வான்இன்று – வான்மழை இன்றி
அமையாது – நிலைபெறாது‌
ஒழுக்கு – ஒழுக்கம்

Section: Virtue
Category: Introduction
Chapter 2: The Excellence of Rain

Couplet 20

When water fails, functions of nature cease, you say;
Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered way’

Explanation

If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.

Transliteration

Neerindru Amaiyaadhu Ulagenin Yaaryaarkum
Vaanindru Amaiyaadhu Ozhukku

Glossary

நீர்இன்று – without water
அமையாது – will not function
உலகெனின் – if the world
யார்யார்க்கும் – for anyone
வான்இன்று – without rain
அமையாது – will not function
ஒழுக்கு – disciplined routine

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top