திருக்குறள் 25 – ஐந்தவித்தான் ஆற்றல் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 3: நீத்தார் பெருமை

குறள் 25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

விளக்கம்

ஐந்து புலன்களால் உண்டாகும்‌ ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, விரிந்த வானுலகத்தாரின்‌ தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்‌.

சொற்பொருள்

ஐந்தவித்தான் – ஐம்பொறிகளையும் அடக்கியவன்
ஆற்றல் – வல்லமை; திறமை
அகல்விசும்பு – அகலமான வானம்
உளார் – உள்ளவர்கள்
கோமான் – அரசன்
இந்திரன் – தேவலோகத் தலைவன்; சூரியன்
சாலும் – போதுமான 
கரி – சாட்சி

ஐந்து புலன்கள்

  1. மெய் – தொடுதல்
  2. வாய் – சுவைத்தல்
  3. கண் – பார்த்தல்
  4. மூக்கு – நுகர்தல்
  5. செவி – கேட்டல்
Section: Virtue
Category: Introduction
Chapter 3: The Greatness of Ascetics

Couplet 25

Their might who have destroyed ‘the five’, shall soothly tell
Indra, the lord of those in heaven’s wide realms that dwell

Explanation

Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses.

Transliteration

Aindhavithaan Aatral Agalvisumbu Laarkomaan
Indhirane Saalun Kari

Glossary

ஐந்தவித்தான் – one who subdued the five senses
ஆற்றல் – strength
அகல்விசும்பு – spacious heaven
உளார் – inhabitants
கோமான் – king
இந்திரன் – Indra the king; sun
சாலும் – sufficient 
கரி – evidence; proof

Five Senses

  1. body surface – touch
  2. mouth – taste
  3. eye – see
  4. nose – smell
  5. ear – hear

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top