பால்: | அறத்துப்பால் |
இயல்: | பாயிரவியல் |
அதிகாரம் 1: | கடவுள் வாழ்த்து |
குறள் 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
விளக்கம்
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளில் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியைப் பின்பற்றுபவர் நீண்டகாலம் வாழ்வார்.
சொற்பொருள்
பொறிவாயில் – புலன்களின் வாசல்
ஐந்தவித்தான் – ஐந்தையும் அடக்கியவன்
பொய்தீர் – குற்றமற்ற
ஒழுக்க – அறம் சார்ந்த
நெறிநின்றார் – வழியில் நடப்பவர்
நீடு – நீண்ட காலம்
வாழ்வார் – வாழ்வார்கள்
Section: | Virtue |
Category: | Introduction |
Chapter 1: | Praise of God |
Couplet 6
Long live they blest, who ‘ve stood in path from falsehood freed;
His, ‘Who quenched lusts that from the sense-gates five proceed’
Explanation
Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.
Transliteration
Porivayil Indhavithaan Poitheer Ozhukka
Nerininrar Needu Vaazhvaar
Glossary
பொறிவாயில் – gateway of sense
ஐந்தவித்தான் – one who destroyed the five
பொய்தீர் – faultless
ஒழுக்க – virtue
நெறிநின்றார் – abide in the way
நீடு – long time
வாழ்வார் – live