திருக்குறள் 7 – தனக்குவமை இல்லாதான் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து

குறள் 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

விளக்கம்

ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலையைப் போக்குவது கடினம்.

சொற்பொருள்

தனக்குவமை – தனக்கான ஒப்பீடு
இல்லாதான் – இல்லாதவன்
தாள்சேர்ந்தார்க்கு – திருவடியைச் சேர்ந்தவர்க்கு
அல்லால் – தவிர
மனக்கவலை – துன்பம்
மாற்றல் – நீக்குதல்
அரிது – கடினம்

Section: Virtue
Category: Introduction
Chapter 1: Praise of God

Couplet 7

Unless His foot, ‘to Whom none can compare,’ men gain,
‘Tis hard for mind to find relief from anxious pain

Explanation

Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

Transliteration

Thanakkuvamai Illaadhaan Thaalsaerndhaark Kallaal
Manakkavalai Maatral Aridhu

Glossary

தனக்குவமை – comparable
இல்லாதான் – none
தாள்சேர்ந்தார்க்கு – surrendered to the foot
அல்லால் – else
மனக்கவலை – sorrow
மாற்றல் – to remove
அரிது – hard

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top