திருக்குறள் 8 – அறவாழி அந்தணன் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து

குறள் 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

விளக்கம்

அறக்கடலாகவே விளங்கும் இறைவனின் திருவடிகளைப் பற்றியவர்க்கேயன்றி மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது கடினம்.

சொற்பொருள்

அறவாழி – ஒழுக்க முறைகளின் கடல்
அந்தணன் – முற்றும் உணர்ந்த இறைவன்
தாள்சேர்ந்தார்க்கு – திருவடியைச் சேர்ந்தவர்க்கு
அல்லால் – தவிர
பிறவாழி – துன்பம் தரக்கூடிய பிற கடல்
நீந்தல் – கடந்து செல்லுதல்
அரிது – கடினம்

Section: Virtue
Category: Introduction
Chapter 1: Praise of God

Couplet 8

Unless His feet ‘the Sea of Good, the Fair and Bountiful,’ men gain,
‘Tis hard the further bank of being’s changeful sea to attain

Explanation

None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.

Transliteration

Aravaazhi Nndhanan Thaalsaerndhaark Kallaal
Piravaazhi Neendhal Aridhu

Glossary

அறவாழி – sea of virtue
அந்தணன் – gracious being (Lord)
தாள்சேர்ந்தார்க்கு – surrendered to the feet
அல்லால் – else
பிறவாழி – sea of vice
நீந்தல் – to swim
அரிது – hard

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top